< Back
ஞாயிறுமலர்
சமையல் டிப்ஸ்
ஞாயிறுமலர்

சமையல் டிப்ஸ்

தினத்தந்தி
|
20 Aug 2023 12:57 PM IST

1. பால் பாயசம் செய்வதற்கு பச்சரிசியை நன்கு களைந்து அரை மணி நேரம் ஊறவைத்துப் பிறகு பாலில் வேக வைக்க வேண்டும். சிறிது சிறிதாக பாலை சேர்த்துக் கொண்டு வந்தால் தான் பாயசம் மணத்துடன் இருக்கும்.

2. நூடுல்ஸ் செய்யும் போது அது எதுவாக இருந்தாலும் முதலில் மசாலாவை போட்டு நன்கு கலக்கி பின்பு நூடுல்ஸை போட, நூடுல்ஸ் முழுவதும் மசாலா சீராக இருக்கும்.

3. இட்லி செய்யும் போது, இட்லி கெட்டியாக இருந்தால் 4 பச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் போட்டு ஒரு நிமிடம் ஓட விட்டு மாவில் கலந்து அதற்கு பின் வார்த்து பாருங்கள். இட்லி பூ மாதிரி இருக்கும்.

4. மிளகாய் வற்றலை வறுக்கும் முன் அதனுடன் அரை ஸ்பூன் சாதாரண உப்பை சேர்த்தால் மூக்கை துளைக்கும் நெடி வராது.

5. வாழைத்தண்டை நார் இல்லாமல் நறுக்கி லேசாக எண்ணெய்யில் வதக்கி கொள்ளவும். 2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 4 மிளகாய் வற்றலை எண்ணெய்யில் வறுத்து தேவையான அளவு உப்பு, பூண்டு சேர்த்து சட்னியாக அரைத்தால் சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

6. வெண்டைக்காய்களை பிளாஸ்டிக் பையில் போடாமல் துணிப் பையில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் வெண்டைக்காய் பிரஷ் ஆக இருக்கும்.

7. காய்கறி மற்றும் கீரை வகைகளை வதக்குவதை விட கூட்டாக சமைத்தால் வைட்டமின் சத்துக்கள் வீணாகாது.

8. பாகற்காய் பொரியல் செய்யும்போது முளைக்கீரை அல்லது அரை கீரையை பொடியாக நறுக்கி பாகற்காயுடன் சேர்த்து வதக்கி சாப்பிட்டால் ருசியாகவும், மணமாகவும் இருக்கும்.

9. கேசரி செய்யும் போது கடைசியாக கொஞ்சம் வறுத்த கடலை மாவை போட்டு கிளறி செய்தால் சேர்ந்தாற்போல் இருப்பதுடன் அசோகாவின் டேஸ்ட் கிடைக்கும்.

-வி.கலைமதி சிவகுரு, புன்னை நகர், நாகர்கோவில்.

மேலும் செய்திகள்