< Back
ஞாயிறுமலர்
சமையல் டிப்ஸ்
ஞாயிறுமலர்

சமையல் டிப்ஸ்

தினத்தந்தி
|
30 July 2023 10:53 AM IST

* சப்பாத்திக்கு மாவு பிசையும்போது சிறிதளவு ஏலக்காய் தூளும், சுக்குத்தூளும் கலந்தால் சப்பாத்தியின் சுவை அதிகரிக்கும்.

* ஆப்பத்துக்கு மாவு கலக்கும்போது ஒரு டேபிள்ஸ்பூன் கோதுமை மாவு சேர்த்துக்கொள்ளுங்கள். அதனை ஆப்பச்சட்டியில் வார்த்தால் ஆப்பம் சீக்கிரம் உலர்ந்து போகாது.

* பாகற்காயுடன் உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, வெல்லம் சேர்த்து 30 நிமிடங்கள் ஊற வைத்து சமைத்தால் பாகற்காய் கசக்காது.

* வெங்காயத்தை சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கிய பின் அரைத்தால் சட்னி கசக்காமல் ருசியாக இருக்கும்.

* சாம்பார் புளித்தால் சிறு உருண்டை வெல்லம் சேர்த்தால் போதும். புளிப்பு சுவை நீங்கிவிடும்.

* உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு வறுவல் செய்யும்போது கொஞ்சம் ரொட்டித்தூள் போட்டு சமைத்தால் மொறுமொறுவென்றும், ருசியாகவும் இருக்கும்.

* வாழை இலையை பின்புறமாக தீயில் காட்டிய பிறகு சாப்பாடு பொட்டலம் கட்டினால் இலையை எவ்வளவு மடக்கினாலும் சட்டென்று கிழியாது.

* குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால் அரிசியை கொஞ்சமாக வறுத்து பொடி செய்து குழம்பில் சேர்த்தால் போதும். உப்பின் வீரியம் குறைந்துவிடும்.

-எம்.ரேவதி, நாசரேத்.

மேலும் செய்திகள்