< Back
ஞாயிறுமலர்
நீளமாக தாடி வளர்க்கும் பெண்மணி
ஞாயிறுமலர்

நீளமாக தாடி வளர்க்கும் பெண்மணி

தினத்தந்தி
|
20 Aug 2023 11:35 AM IST

ஹார்மோன்களின் செயல்பாடுகளில் நிகழும் மாறுபாடு காரணமாக பெண்கள் சிலருக்கு முகத்தில் முடி வளரக்கூடும்.

முகத்தில் அடர்த்தியாக வளரும் முடி அகற்ற முடியாத அளவிற்கு தாடியாக மாற அதனையே தனக்கான அடையாளமாக மாற்றி கின்னஸ் சாதனையிலும் இடம் பிடித்துவிட்டார், எரின் ஹனிகட்.

38 வயதாகும் இவர் அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியை சேர்ந்தவர். பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் எனப்படும் கருப்பை சார்ந்த நோய் பாதிப்புக்கு ஆளானவர். அதனால் ஏற்பட்ட ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக முகத்தில் அதிகப்படியான முடி வளர்ச்சி ஏற்பட்டது.

13 வயதிலேயே எரினுக்கு இந்த பிரச்சினை ஆரம்பமாகிவிட்டது. வாக்சிங் செய்வது, முடியை வெட்டுவது என முகத்தில் வளர்ந்த முடியை அகற்றிப்பார்த்தார். ஆனால் முடி வளர்ச்சி நின்றபாடில்லை.

ஒரு நாளைக்கு மூன்று தடவை சேவிங் செய்தும் பார்த்தார். அப்போதும் முடி வளர்ச்சியை கட்டுப்படுத்தமுடியவில்லை. எவ்வளவு சிரமப்பட்டு முகத்தில் வளரும் முடியை அகற்ற தொடங்கினாலும் சில மணி நேரத்திற்குள் மீண்டும் துளிர்விட தொடங்கியது. இதற்கிடையே உயர் ரத்த அழுத்தம் காரணமாக கண்களில் பாதிப்பு ஏற்பட்டு பார்வை இழப்பு பிரச்சினையையும் எதிர்கொண்டிருக்கிறார். இதனால் விரக்தி அடைந்தவர் முகத்தில் முடியை வளர்க்க தொடங்கிவிட்டார். அது தாடியாக மாறிவிட்டது. அவரை கின்னஸ் சாதனையிலும் இடம்பிடிக்க வைத்துவிட்டது.

இதற்கு முன்பு விவியன் வீலர் என்ற பெண்மணி 10.04 அங்குலம் தாடி வளர்த்திருந்தது கின்னஸ் சாதனையாக பதிவாகி இருந்தது. தற்போது எரினுக்கு 11.8 அங்குலம் தாடி வளர்ந்திருக்கவே விவியன் வீலரின் சாதனையை முறியடித்துவிட்டு, நீளமாக தாடி வளர்த்திருக்கும் பெண்மணி என்ற சாதனையை தன்வசப்படுத்தி இருக்கிறார்.

மேலும் செய்திகள்