< Back
மாணவர் ஸ்பெஷல்
பாம்புகள் இல்லாத அட்லாண்டிக் கடல்
மாணவர் ஸ்பெஷல்

பாம்புகள் இல்லாத 'அட்லாண்டிக் கடல்'

தினத்தந்தி
|
16 Jun 2023 7:59 PM IST

அட்லாண்டிக் பெருங்கடலின் நீர் மிகுந்த உவர்ப்புத் தன்மை மிக்கதாகும். காலநிலைக்கு ஏற்பவும், மழைப்பொழிவு, உயர் ஆவியாதல் போன்ற காரணிகளால் இந்த அளவு வேறுபடுகிறது.

அட்லாண்டிக் பெருங்கடல் (Atlantic Ocean) உலகின் 2-வது பெரிய பெருங்கடலாகும். இது 106,400,000 சதுர கிலோ மீட்டர் (41,100,000 சதுர மைல்கள்) பரப்பளவைக் கொண்டது. புவிப்பரப்பில் சுமார் 20 சதவீத இடத்தையும், புவியின் நீர்ப்பரப்பில் சுமார் 29 சதவீத இடத்தையும் அட்லாண்டிக் பெருங்கடல் கொண்டுள்ளது. மேற்கு கண்டம் என அழைக்கப்பட்ட புதிய உலகத்தையும் கிழக்குக் கண்டம் என அழைக்கப்பட்ட பழைய உலகத்தையும் அட்லாண்டிக் பெருங்கடல் இணைக்கிறது.

அட்லாண்டிக் பெருங்கடல் ஒரு நீளமான, S- வடிவ வடிநிலத்தை கொண்டது. கிழக்கில் யூரேசியாவிற்கும் ஆப்பிரிக்கா விற்கும் இடையிலும், மேற்கில் அமெரிக்கா விற்கும் இடையிலும் இப்பெருங்கடல் நீட்டிக்கப்பட்டிருக் கிறது. ஒன்றிணைந்த உலகளாவிய கடல் பரப்பின் ஒரு பகுதியாக, வடக்கில் ஆர்க்டிக் பெருங்கடல், தென்மேற்கில் பசிபிக் பெருங் கடல், தென்கிழக்கில் இந்தியப் பெருங்கடல் மற்றும் தெற்கில் தென் பெருங்கடல் என கடல்களுடன் அட்லாண்டிக் பெருங்கடல் இணைந்துள்ளது. ஆர்க்டிக் கடலில் இருந்து அண்டார்க்டிக் கடல்வரை அட்லாண்டிக் விரிவடைந்துள்ளதாக பிற வரையறைகள் தெரிவிக்கின்றன.

அட்லாண்டிகோய் பெலாகி என்ற சொல் ஆங்கிலத்தில் 'the Atlantic sea' என்றும் கி.பி. 450 காலத்திய கிரேக்க வரலாற்று அறிஞர் எரோட்டசின் நூலில் அட்லாண்டிசு தலசா என்ற சொல் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. இதன் பொருள் நிலப்பகுதிகள் யாவற்றையும் சூழ்ந்துள்ள கடற்பகுதி என்பதாகும். ஒருபுறம், கிரேக்க புராணங்களில் டைட்டான் என்ற வானக் கடவுளைக் குறிப்பிட இப்பெயர் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது. இக்கடவுள் சொர்க்கத்தை ஆதரித்து பின்னர் மத்திய கால வரைபடத்தில் ஒரு முன்னோடிப் பாத்திரமாக இடம் பெற்ற வராவார். மேலும் இவருடைய பெயர் நவீன அட்லசுக்கும் பெயராக வைக்கப்பட்டது.

மத்திய அட்லாண்டிக் மலைத்தொடர் என்ற பெயரில் அழைக்கப்படும் ஒரு நீர்மூழ்கி மலை முகடு ஒன்று அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழப்பகுதியில் அமைந்துள்ளது. வடக்கிலிருந்து தெற்கு நோக்கி 87° வடக்கு அல்லது வடதுருவத்திற்குத் தெற்கே 300 கிலோமீட்டர் தொலைவில் அண்டார்டிக் கிலுள்ள 42° தெற்கு பவுவெட் தீவில் செல்கிறது. நிலநடுக்கோடு அட்லாண்டிக் கடலை வட, தென் அட்லாண்டிக் என இரண்டு கடல்களாகப் பிரிக்கிறது. தென் அட்லாண்டிக் கடல் வட அட்லாண்டிக் கடலைவிட குளிர்ச் சியாக இருக்கிறது. கடலின் அடிப்பகுதியில் இவ்வெப்பநிலை உறைநிலையையும் நெருங் கும். மேற்பரப்பில் வெப்பநிலையானது -2° செல்சியசு வெப்பநிலை முதல் 30° செல்சியசு வரை இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை நிலப்பகுதிக்கு வடக்கே ஏற்படுகிறது மற்றும் துருவ மண்டலங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை காணப் படுகின்றன.

அட்லாண்டிக் பெருங்கடலின் நீர் மிகுந்த உவர்ப்புத் தன்மை மிக்கதாகும். காலநிலைக்கு ஏற்பவும், மழைப்பொழிவு, உயர் ஆவியாதல் போன்ற காரணிகளால் இந்த அளவு வேறுபடுகிறது.

அதிக அளவிலான ஆறுகள் அட்லாண்டிக் கடலில் கலக்கின்றன. மற்ற பெருங்கடல்களைக் காட்டிலும் இங்கு ஆற்று நீர் அதிகமாகக் கலக் கிறது. புவியின் இரண்டு அரைக் கோளத்திலும் காணப்படும் பெரும் பள்ளத்தாக்குகள் அனைத்தும் அட்லாண்டிக் பெருங்கடலை நோக்கியே சாய்ந்துள்ளன. இதன் அடியில் சாம்பல் நிறமுள்ள படிவுகள் உள்ளன. சிவப்புக் களிமண்ணும் சில இடங்களில் காணப்படுகின்றது. குழைவான சேறும் உண்டு. இதற்குப் பெரிய விரிகுடாக்களும் வளைகுடாக்களும் உண்டு மற்றும், உள்நாட்டுக் கடல்களும் நீரோட்டங் களும் உண்டு. உலகம் முழுவதற்கும் இது மையத் தரைக் கடலாக உள் ளது. இதன் ஆற்று வடிநிலம் (river basin) உலகிலேயே மிகப் பெரியது. இதன் நீரோட்டங்களும் மற்ற எந்தக் கடலின் நீரோட்டங்களைக் காட்டிலும் நன்கு அறியப்பட்டுள்ளன. விலங்குகளும், பயிர்களும் உள்ளன. மீன்கள் (காட், ஹெரிங்), முத்துக்கள், சிப்பிகள், நண்டுகள், கடற்பஞ்சு முதலிய விலங்கினங்கள் இதில் வாழ்கின் றன. இதிலுள்ள பயிர் வகைகள் மருந்துகள் செய்யவும், ரசாயனப் பொருள்கள், உரங்கள் ஆகியவை தயாரிக்கவும் பயன்படுகின்றன. ஆனால் இங்கு பாம்புகள் கிடையாது.

நீர்வழி என்னும் வகையில் உலகின் சிறந்த வாணிப வழியாக அட்லாண்டிக் உள்ளது. பெருமள வுக்கு வாணிபம் இதன் வழியாகவே நடைபெறுகிறது. ஐம்பெருங்கடல்களிலும் வாணிப நோக்கில் இது மிகச் சிறந்தது. இதன் கரைகளில் வளமிக்க நாடுகள் உள்ளன. மவுண்ட் அட்லாஸ் என்னும் மலை அல்லது அட்லாண்டிஸ் என்னும் தீவு ஆகிய இரண்டின் பெயர்களே இதன் பெயர் அமைவதற்குக் காரணமாகின.

மேலும் செய்திகள்