< Back
மாணவர் ஸ்பெஷல்
தனித்துவமாக விளங்கும் வள்ளிக்கும்மி
மாணவர் ஸ்பெஷல்

தனித்துவமாக விளங்கும் 'வள்ளிக்கும்மி'

தினத்தந்தி
|
25 Sept 2023 9:05 PM IST

கொங்கு நாட்டின் மிகவும் தனித்தன்மையாக காணப்படு வது வள்ளிக்கும்மி. கும்மி என்பது கொம்மை கொட்டுதல் என இலக்கியம் கூறுகிறது. கொம்மைதான் கும்மியாக திரிந்திருக்கலாம்.

வள்ளிக்கும்மி ஆண்கள் தான் ஆடுவார்கள். பெண்கள் ஆடு்ம் கும்மியில் சலங்கை மற்றும் இசைக்கருவி இல்லை. இப்போது பெண்கள் மிகுதி யாக கலந்துகொள்ளும் கலையாக கொங்கு நாட்டின் வள்ளிக்கும்மி திகழ்கிறது. கும்மிப்பாடலை ஒருவரே பல மணி நேரம் பாடுவார். ஆண்கள் மட்டுமே வள்ளி கும்மியை ஆடினார்கள் என்று சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம்.

வள்ளிக்கும்மி என்பது முருகன், வள்ளி, பிறப்பு முதல் திருமணம் வரை உள்ள செய்தி களை பாடுவதாக வள்ளிக் கும்மி அமைகிறது. கொங்கு நாட்டின் நாகரிகம், பண்பாட்டை எடுத்துச்சொல் லும் வகையில் வள்ளி கும்மி உள்ளது.

ஆயற்கலை 64 கலைகளில் முதன்மையானது வள்ளிக் கும்மி. முறையாக பயிற்சி பெற்றே இதனை அரங்கேற்றம் செய்கிறார்கள். 40 நாட்கள் அல்லது 30 நாட்கள் முறையாக பயிற்சி பெற்று அதற்கு முறையாக பூஜை ெசய்து சலங்கை அணிந்து அரங்கேற் றம் செய்வார்கள். அரங்கேற் றம் என்பது தனக்கு கற்று தந்த ஆசிரியர்களை கவுரவிக் கும் வகையில் அமையும்.

வள்ளி கும்மி ஆடுவதற்கு முன்னர் முதலில் காப்பு பாடல்களை பாடி துவங்குவார் கள். தண்டபானி, பரிவார தெய்வங்கள், அம்மனை அழைத்து, மன்னர்களை போற்றி என்ன செய்வோம் கன்னிமாரே என்று கிழங்கு எடுக்க போய் அங்கு குழந்தை கிடைக்கும் மகாதேவன் தன்னருளால் வள்ளி குழியிலே கிடக்க நீராட்டி 12 வரிகளி லேேய பெரிய பெண்ணாகி விடுவாள் என்று பாடல்கள் தொடங்கும். குறவர் இனங் களில் பெண்கள் தான் காவல் செய்ய வேண்டும். கிளி விரட்டி விடும் வள்ளி முருகனுக்கு ஏற்ற பெண் என்று வரைந்து கொடுக்கிறார். விநாயகர் பெருமானை அனுப்பி சம்மதம் கேட்டு வள்ளி முருகன் திருமணம் நடக்கிறது. இவ்வாறு கதை யில் அமையும்.

திருமணத்திற்கு மேல் உள்ள கதைகளை பாடிச் செல்ல 2 மாதங்கள் ஆகும் என்று வள்ளி கும்மி ஆடுபவர் கள் மற்றும் பாடுபவர்கள் சொல்கிறார்கள்.

வள்ளி கும்மி என்பது தமிழர்கள் பண்பாட்டிற்கு பெருமை சேர்ப்பது மட்டுமில் லாமல் உடல் நலமும் நன்றாக இருக்கிறது. மூச்சிப்பயிற்சி போன்றும் இது அமையும். வள்ளி கும்மி ஆடுவதன் மூலம் உடலும் உள்ளமும் சேர்ந்தே பயணிக்கிறது. பாடல், நடனம் என்று இருப்ப தால் மனதும் சுத்தமாகிறது. கர்ப்பிணி பெண்களும் இதனை கற்று ஆடுகிறார்கள். அவர்கள் உடல் நலம் ஆரோக் கியமாக இருப்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. இந்த வள்ளி கும்மிைய ஆடுவதால் உச்சி முதல் உள்ளாங்கால் வரை ஆரோக்கியமாக இருப்பதாக கூறி வருகிறார் கள்.

வள்ளி கும்மியாட்டம் பாரம்பரியமான கலைகளில் ஒன்றாகும். 2 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பே போற்றப்பட் டது. 2 மணி நேரம் சளைக் காமல் ஆண்களும், பெண் களும் வளைந்து நெளிந்து குனிந்து கைகளை உயர்த்தி தாழ்த்தி ஆடுகிறார்கள். இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அழிவின் விழிம்பு வரை பெற்ற இந்த கலை என்றும் போற்றத்தக்க தாக விளங்கி வருகிறது.

மேலும் செய்திகள்