< Back
மாணவர் ஸ்பெஷல்
பாரம்பரிய மருத்துவம்
மாணவர் ஸ்பெஷல்

பாரம்பரிய மருத்துவம்

தினத்தந்தி
|
25 Aug 2023 9:33 PM IST

பழங்காலத்தில் நாள்பட்ட நோய்களை கூட போக்கும் அருமருந்தாக, சித்த மருத்துவ முறை திகழ்ந்தது.

சாதாரண சளி, இருமலுக்கு கூட இப்போதெல்லாம் மருத்துவரை நாடிச் சென்று, பணத்தை செலவழித்து வருகிறோம். ஆனால் அந்த காலத்தில் சின்னச் சின்ன உடல் உபாதைகளுக்கு, நாட்டு மருந்து, வீட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம் என்று சொல்லப்படும் மருத்துவமுறை கையாளப்பட்டு வந்தது.

சளி, இருமல் இருப்பவர்களுக்கு, மிளகு, சுக்கு, திப்பிலி போன்றவற்றை பொடித்து தண்ணீரில் கலக்கி கொடுத்தாலே அது சரியாகிவிடும்.

'உணவே மருந்து' என்பது பழமொழி. அந்த காலத்தில் இருந்த பாராம்பரிய உணவு வகைகள் அனைத்தும் பலராலும் இன்று மறக்கப்பட்டு விட்டது. துரித உணவுகள், குப்பை உணவு என்று அழைக்கப்படும் ஜங்புட் சாப்பிடுவதால் உடநலக் கோளாறுகளும், உடல் பெருக்கமும் ஏற்படுகிறது.

பழங்காலத்தில் நாள்பட்ட நோய்களை கூட போக்கும் அருமருந்தாக, சித்த மருத்துவ முறை திகழ்ந்தது. இப்போதும் சித்த மருத்துவமுறை உள்ளது என்றாலும், அதை பின்பற்றுபவர்கள் வெகு சிலரே.

சமீபத்தில் டெங்கு, கொரோனா போன்ற நோய்களால் உலகமே திகைத்து நின்ற தருணத்தில், தமிழ்நாட்டில் நிலவேம்பு கசாயம் என்னும் மூலிகைச் சாறை பயன்படுத்தி நோயின் தாக்கத்தை பெருமளவில் கட்டுப்படுத்தியதை நாம் மறந்துவிட முடியாது.

மேலும் செய்திகள்