< Back
மாணவர் ஸ்பெஷல்
அவ்வை சொல்லும் நல்வழி
மாணவர் ஸ்பெஷல்

அவ்வை சொல்லும் 'நல்வழி'

தினத்தந்தி
|
23 May 2023 11:43 AM IST

ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி என்று அவ்வையார் பாடிய நூல்கள் சிறப்புக்குரியவை. சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்களில் பெண் புலவர்களின் எண்ணிக்கை குறைவு. அந்த பெண் புலவர்களில் மிகவும் சிறப்புக்குரியவராக அவ்வையார் கருதப்படுகிறார். இவர் இயற்றிய நூல்களில் 'நல்வழி' என்னும் நூல், மனிதர்கள் எப்படிப்பட்ட வழியில் பயணிக்க வேண்டும் என்பதை எடுத்துச் சொல்வதாக அமைந்துள்ளது. கடவுள் வாழ்த்துப் பாடலோடு சேர்த்து மொத்தம் 41 பாடல்கள் அடங்கிய இந்த நூலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் இங்கே பார்க்கலாம்.

பாடல்:-

பூவாதே காய்க்கும் மரமுள மக்களும்

ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே தூவா

விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு

உரைத்தாலும் தோன்றா உணர்வு.

விளக்கம்:

பூ பூக்காமல் காய்க்கும் மரங்கள் உள்ளன, அது போல் ஏவல் செய்வதற்கு முன், குறிப்பறிந்து வேலை செய்யும் வேலைக்காரர்களும் உள்ளனர். இதற்கு மாறாக, தூவி விதைத்தாலும் முளைக்காத விதைகள் உள்ளன. அது போல் மூடர்களுக்கு எத்தனை உரைத்தாலும் அவர்கள் மாற மாட்டார்கள்.

க.சுரேஷ்,10-ம் வகுப்பு,அரசு மேல்நிலைப்பள்ளி, அனகாபுத்தூர்.

மேலும் செய்திகள்