சுனிதா வில்லியம்ஸ்
|விண்வெளி வீராங்கனையாக விண்வெளிக்கு சென்று தமது தேசத்துக்கு பெருமை சேர்த்தவர் சுனிதா வில்லியம்ஸ்.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவால் 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9-ந் தேதி அவர் விண்வெளிக்கு சென்றார். அதற்காக அவர் மிகவும் கடினமாக உழைத்தார். இதன்மூலம் உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு தங்கள் வாழ்க்கையில் வெற்றிக்காக மிகவும் போராடும் சுனிதா வில்லியம்ஸ் ஒரு உதாரணம் ஆகி உள்ளார். சுனிதா வில்லியம்ஸ் 1965-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந் தேதி அன்று அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் அமைந்துள்ள யூக்லிட் நகரில் பிறந்தார். அங்கு அவர் அமெரிக்க குடியுரிமை பெற்றார். ஆனால் அவருடைய பெற்றோர். இந்தியர்கள். சுனிதா வில்லியம்ஸ் பூர்வீகமாக இந்தியர். அவரது பெற்றோர் இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் வசித்தனர். சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காவில் பிறந்ததால் அவரது முழுக்கல்வியும் அமெரிக்காவில் நடந்தது. அவர் 1983-ம் ஆண்டு மாசசூசெட்சில் உயர்நிலைப்பள்ளி படிப்பை படித்தார். அதன்பிறகு 1967-ம் ஆண்டு அமெரிக்க கடற்படை அகாடமியில் இயற்பியல் பாடத்தில் நல்ல மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றார். அதன்பிறகு 1995-ம் ஆண்டு புளோரிடா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பொறியியல் பட்டம் பெற்றார்.
விண்வெளி நட்சத்திரமாக மாறுவதற்கான சுனிதா வில்லியம்சின் பயணம் அமெரிக்க கடற்படையில் அவரது பணியில் இருந்து தொடங்கியது பல வகையான ஹெலிகாப்டர் மற்றும் விமான பயணங்களில் அவர் பயிற்சிபெற்றார். அதன் பிறகு 1998-ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு அவரது பயிற்சி தொடங்கியது பின்னர் அவர் ஒரு விண்வெளி வீராங்கனை ஆனார்.சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி வீராங்கனையாக மாறியதும், அவரது முதல் விண்வெளிப்பயணம் 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9-ந் தேதி அன்று டிஸ்கவரி வாகனத்துடன் தொடங்கியது தனது முதல் பயணத்தில் அவர் இந்த வாகனத்துடன் சர்வதேச விண்வெளி நிலையத்தை 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந் தேதி அடைந்தார். இந்த முதல் விண்வெளி பயணத்தின் போது சுனிதா வில்லியம்ஸ் 6 மாதங்கள் விண்வெளியில் தங்கி இருந்தார். அதன்பிறகு 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் 22-ந் தேதி அன்று அவர் பூமிக்கு திரும்பினார். அவரின் இந்த சாதனை பயணத்துக்கு பிறகு பல விருதுகளை பெற்றார். 2008-ம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவித்தது. அதன்பிறகு 2013-ம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது. இன்றைய காலக்கட்டத்தில் சுனிதா வில்லியம்ஸ் அனைத்து பெண்களின் வெற்றிக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார். எல்லா பெண்களும் தங்கள் வாழ்க்கையில் முன்னேற உத்வேகம் பெறலாம்.