அணுவிஞ்ஞானி ஏ.பி.ஜே. அப்துல்கலாம்
|தமிழகம் தந்த தவப்புதல்வர்களுள் ஒருவர் நம் இந்திய நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள்.
சாதாரண ஏழைக்குடும்பத்தில் பிறந்து தன் அயராத உழைப்பால் உலகம் போற்றும் விஞ்ஞானியாக திகழ்ந்து இந்திய குடியரசு தலைவராக உயர்ந்தவர்.
பிறப்பும்- இளமைக்காலமும்:
தமிழகத்தில் உள்ள ராமேசுவரத்தில் 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந்தேதி அப்துல்கலாம் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் ஜெயினுலாம்தீன். தாய் ஆஷியம்மா. கலாம் அவர்கள் ஆரம்பக்கல்வி முதல் உயர்நிலைப்பள்ளி வரை ராமேசுவரத்தில் கற்றார். சென்னையில் பொறியியல் படிப்பை முடித்தார்.
கலாம் வகித்த பணிகள்:
கலாம் தொடக்கத்தில் விமான உற்பத்தி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். அங்கு நந்தி என்ற ஜெட் விமானத்தை உருவாக்கினார். இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் மிக மிக்கிய பொறுப்பு வகித்தார். தகவல் துறையிலும், பாதுகாப்பு துறையிலும் அவர் ஆற்றிய பணிகள் அதிகம்.
விருதுகளும் பட்டங்களும்:
அப்துல்கலாம் அவர்கள் பல விருதுகளும் பட்டங்களும் பெற்றுள்ளார். டாக்டர் பிரேன்ராய் விண்வெளிவிருது, ஓம் பிரகாஷ் பாஸின் விருது, பத்ம விபூஷன் விருது, நேரு தேசிய விருது, இந்திராகாந்தி விருது. 1998-ம் ஆண்டு கலாம் அவர்களுக்கு இந்திய நாட்டின் மிகசிறந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
குடியரசு தலைவரானார்:
இவரது மாண்பைக்கண்டு மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் கலாம் அவர்களை இந்திய நாட்டின் குடியரசு தலைவர் பதவியில் அமர்த்தினர். 25-7-2002-ம் நாள் பாரத நாட்டின் 11-வது குடியரசு தலைவர் ஆனார் கலாம் அவர்கள்.
முடிவுரை:
மாணவர்களை இந்நாட்டின் வருங்காலத்தூண்கள் என்பதை உணர்ந்து பல உபதேசங்களை கூறிவந்தார்.கலாம் அவர்களின் ஒவ்வொரு சொல்லும் செயலும் நம் நாட்டின் முன்னேற்றத்திற்கானவை என்பதில் ஐயமில்லை.