உலகின் நீளமான மணற்குகை
|உலகின் நீளமான மணற்குகை மேகாலயாவில் மவ்சின்ராம் பகுதியில் காணப்படுகிறது.
உலகின் மிக நீளமான மணற்குகை சமீபத்தில் மேகாலயாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேகாலயா, ஏற்கனவே மிகப்பெரிய குகைகளுக்கு பிரபலமான இடமாக இருந்தாலும், 'கிரெம் பூரி' ஒரு நிலத்தடி மணல் குகையாகும். இந்த குகையானது 24.5 கிலோமிட்டர் நீளம் கொண்டது. இந்த நீளமான குகை அமைப்பு மேகாலயாவின் கிழக்கு காசி மலை மாவட்டத்தில் உள்ள மவ்சின்ராம் பகுதியில் அமைந்துள்ள லைட்சோஹம் கிராமத்தில் காணப்படுகிறது. வெப்பநிலை எப்பொழுதும் 16-17 டிகிரி செல்சியஸ் என்ற நிலையிலேயே இருக்கும். இந்த குகை 2016-ம் ஆண்டே கண்டுபிடிக்கப்பட்டாலும் அப்போது அதன் நீளம் கணக்கிடப்படவில்லை. இதற்கு முன்பு வெனிசுலாவில் உள்ள 'எடோ ஜூலியாவில் கியூவா டெல் சமன்' குகையே உலகின் மிக பெரிய குகையாக இருந்து வந்தது. கிரேம் பூரி குகைக்குள் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் புதைபடிவங்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.