பாம்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்
|பாம்புகள் சுற்றுப்புறத்தில் உள்ள வாசனைகளை உணரவே நாக்கை அடிக்கடி வெளியில் நீட்டும். பாம்புகளால் ஒலி அலை உணர இயலாது.
மனித இனத்திற்கு முன்பே தோன்றியவை பாம்புகள். இவைகள் பெரும்பாலும் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். ஆனால், கண்ணாடிவிரியன், பச்சை பாம்பு போன்ற சில வகைகள் குட்டி போடும். நல்ல பாம்பு முட்டையிட்டு குட்டிகள் வெளி வரும் வரை பாதுகாக்கிறது. பாம்புகள் சுற்றுப்புறத்தில் உள்ள வாசனைகளை உணரவே நாக்கை அடிக்கடி வெளியில் நீட்டும். பாம்புகளால் ஒலி அலை உணர இயலாது. அதற்கு வெளிக்காது மற்றும் நடுக்காது அமைப்புகள் இல்லை. அதன் உடல் வளர்ச்சி காரணமாகவே அதன் மேற்தோல்களை உரித்துக் கொள்கின்றன. பாம்புகளில் நச்சு சுரப்பி, உமிழ்நீர் சுரப்பியிலிருந்து தோன்றியதாகும்.
விஷமுள்ள பாம்புகளின் கடி அனைத்துமே உயிரிழக்க செய்வதில்லை. விஷப்பாம்பு கடியின் பாதிப்பு உடலில் செல்லும் விஷத்தின் அளவைப் பொருத்தே அமையும். பாம்புக் கடியால் ஏற்படும் பல மரணங்கள் விஷத்தினால் ஏற்படுவதில்லை. அதிர்ச்சியினால் ஏற்படுவதாகும். எனவே, பாம்பு கடி பட்டவரை அதிர்ச்சியடையாமல் பார்த்து கொள்ள வேண்டும். கடிபட்ட இடத்திற்கு மேல் ரத்த ஓட்டம் தடைபடாத வகையில் கட்டு போட வேண்டும். பாம்பு கடிபட்டவரை விஷமுறிவு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்ல வேண்டும்.பாம்பின் வால் குறுக்கு வாக்கில் தட்டையாக அமைந்து இறுதியில் அகன்று இருந்தால் அது விஷமுள்ள கடற்பாம்பு வகையாகும்.பாம்பின் வால் பகுதி உருளை வடிவில் அமைந்து, வயிற்று புற செதில்கள் விரிந்து காணப்பட்டு,தலையில் சிறு சிறு செதில்கள் இருந்தால் அது விஷமுள்ள விரியன் பாம்பு வகைகள்.கண்ணுக்கும், மூக்கு துவாரத்திற்கும் இடையே சிறு குழி காணப்பட்டால் அது விஷமுள்ள குழிவிரியன் வகையாகும்.
பாம்பின் முதுகின் நடுவில் உள்ள செதில்கள் அறுங்கோண வடிவில் அமைந்து, பிற செதில்களை விட பெரியதாக இருந்து, கீழ் உதட்டு செதில் பெரியதாக இருந்தால் விஷமுள்ள கட்டுவிரியன் வகையை சேர்ந்ததாகும்.வயிற்றுபுறம் விரிந்து காணப்படாமல் இருந்தால் அது விஷமற்ற பாம்புகளாகும்.தலைப் பகுதியில் பெரிய கவசத்தால் தகடுகள் அமைந்து சாதாரணமாக காணப்பட்டால் அவைகள் விஷமற்றவைகள். நல்ல பாம்பு மகுடியின் இசைக்கேற்ப படம் எடுத்து ஆடும்.நல்ல பாம்பும், சாரைப் பாம்பும் ஒரே இனத்தை சேர்ந்த ஆண், பெண் பாம்புகள்.நல்ல பாம்பு மிகவும் வயதானவுடன் தன் தலையில் மாணிக்ககல் வைத்திருக்கும்.