நாகேசுவரசுவாமி கோவில்
|குடந்தை கீழ்க்கோட்டம் நாகேசுவரசுவாமி கோவில் அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள சிறப்பு மிக்க கோவில்களில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலும் ஒன்றாகும். அதன் சில சிறப்பு மிக்க தகவல்களை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
தலவரலாறு:
அமுது குடத்துக்கு அருச்சித்த வில்வம் விழுந்த இடத்தில் சிவக்குறியொன்று தோன்றியது. அத்தலம் வில்வவனேசம் எனப்பெயர் பெற்றது. இத்தலம் நாகேசம் என்றழைக்கப்படுகிறது. கும்பகோணத்தில் உள்ள மிகத்தொன்மையான கோவில்களில் இக்கோவிலும் ஒன்றாகும்.
கோவில் அமைப்பு:
ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. உள்ளே இடப்பக்கம் நந்தவனம், சிங்கமுக தீர்த்த கிணறு உள்ளது. வலப்பக்கம் பெரியநாயகி சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. உள்ளே சென்றால் இடது பக்கம் பதினாறு கால் மண்டபமும் வலது பக்கம் நடராஜசபையும் உள்ளன.
கோவிலில் சிறப்பு இடங்கள்:
நடராஜர் மண்டபம்:நடராஜ மண்டபம் ரத அமைப்பில் உள்ளது. இரு புறங்களிலும் உள்ள கல்(தேர்) சக்கரம் உள்ளது. இச்சக்கரங்களின் ஆரங்களாக 12 ராசிகளும் இடம் பெற 2 குதிரைகளும், நான்கு யானைகளும் இழுக்கும் நிலையில் இத்தேர்மண்டபம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கொடிமரம்: இந்த கோவிலின் முன்பு சுமார் 35 அடி உயரத்தில் இருந்த கொடிமரத்தின் மேல்பகுதி சேதமடைந்ததால் அதனை சீரமைத்து 29 ஜனவரி 2016-ம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
முடிவுரை:
தமிழகத்தில் மொத்தமாக 308 சிவாலயங்கள் உள்ளன. இதை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்ப்பது நம் கடமையாகும்.