கண்தானம்
|கண்தானம் செய்ய உங்கள் ஊருக்கு அருகில் உள்ள கண்தான வங்கியை உடனடியாக அணுக வேண்டும்.
இறந்த நபர், மீண்டும் இந்த உலகத்தைப் பார்க்க வேண்டுமானால், கண் தானத்தைத் தவிர சிறந்த வழி வேறு ஏது? கண்தானம் செய்ய உங்கள் ஊருக்கு அருகில் உள்ள கண்தான வங்கியை உடனடியாக அணுக வேண்டும். உங்கள் ஊருக்கு அருகில் உள்ள கண்தான வங்கியின் தொலைபேசி எண், முகவரி ஆகியவற்றை அறிய தமிழக அரசின் 104 என்ற இலவச தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
கண்தான வங்கியில் இருந்து டாக்டர்கள் வரும்வரை இறந்தவரின் கண் இமைகளை மூடி வைக்க வேண்டும். மூடிய இமைகளின் மீது ஈரப் பஞ்சை வைத்திருக்க வேண்டும். இறந்தவர் உடல் வைக்கப்பட்டு இருக்கும் அறையில் மின்விசிறியை அணைத்துவிட வேண்டும். கண்தானம் கொடுக்க வயது வரம்பு கிடையாது.
நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்களின் கண்களை கூட தானம் செய்யலாம். கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களின் கண்களையும் தானம் செய்யலாம்.
புற்றுநோய், எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, நச்சுக் கிருமித் தொற்று, கிருமி பாதிப்பினால் இறந்தவர்கள் மற்றும் காரணம் தெரியாமல் இறந்தவர்களின் கண்களைத் தானமாகப் பெற முடியாது. எனவே கண்தானம் பற்றிய விழிப்புணர்வு மூலம் பார்வை இழந்த மக்களுக்கு பார்வை கொடுக்கலாம்.