< Back
மாணவர் ஸ்பெஷல்
வானம் காட்டும் மழை ஜாலம்
மாணவர் ஸ்பெஷல்

வானம் காட்டும் 'மழை' ஜாலம்

தினத்தந்தி
|
25 Sept 2023 8:47 PM IST

மேகங்கள் குளிர்ந்து வெடித்து மழையாக பொழியும் போது, மேகக் கூட்டங்களில் இருந்த மீன்களும் வானத்தில் இருந்து மண்ணை வந்து அடைகின்றன. இதனையே ‘மீன் மழை’ அல்லது ‘விலங்கு மழை’ என்கிறோம்.

ஐஸ் கட்டி மழை, பனி மழை என மழையில் சில வகைகள் இருக்கின்றன. இதில் ஆலங்கட்டி மழை என்பது அவ்வப்போது எங்காவது நிகழும் சம்பவமாக இருக்கிறது. மீன் மழை என்றும் ஒன்று இருக்கிறது. இந்த மழை பொழிவது என்பது மிகவும் அரிதான ஒன்றாகும். கடல் அல்லது ஆற்றில் இருந்து திடீரென மேகங்கள் தண்ணீரை உள்ளிழுக்கும்போது, தண்ணீரோடு மீன்கள், தவளைகள், பாம்புகள் ஆகியவை சேர்த்து இழுக்கப்பட்டு, மேகக் கூட்டங்களில் அடக்கி வைக்கப்படுகின்றன. மேகங்கள் குளிர்ந்து வெடித்து மழையாக பொழியும் போது, மேகக் கூட்டங்களில் இருந்த மீன்களும் வானத்தில் இருந்து மண்ணை வந்து அடைகின்றன. இதனையே 'மீன் மழை' அல்லது 'விலங்கு மழை' என்கிறோம்.

ஆஸ்திரேலியாவில் உள்ள வறண்ட பகுதியில் இந்த மழை பொழிந்திருக்கிறது. 1974, 2004 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் அங்கு மீன் மழை பெய்திருக்கிறது. இந்தியாவில் தெலுங்கானாவில் உள்ள ஜாக்டியால் பகுதியிலும், உத்தரபிரதேசம் உள்ளிட்ட இடங்களிலும் இதுபோன்று மீன் மழை பெய்துள்ளது. இதே போல புழுக்கள் மழை, சிலந்தி மழை பெய்த அதிசயங்களும் நிகழ்ந்திருக்கின்றன.

2001-ம் ஆண்டு கேரளாவின் தென் மாநிலங்களில் ரத்த மழை பெய்துள்ளது. கேரளாவின் கடற்கரை பகுதிகளில் இருந்து, ஒரு வித பாசிகள் மேகங்களுக்குள் சென்று தங்கி விடுகின்றன. அந்த மேகங்கள் மழையைப் பொழியும் போது சிவப்பு வண்ணத்தில் காட்சி தருகின்றன. இதனைத்தான் 'ரத்த மழை' என்கிறார்கள்.

மேலும் செய்திகள்