< Back
முத்துச்சரம்
கீழக்கரையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
ராமநாதபுரம்
முத்துச்சரம்

கீழக்கரையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

தினத்தந்தி
|
23 April 2023 12:15 AM IST

கீழக்கரையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

கீழக்கரை,

கீழக்கரையில் 8 ஜமாத்திலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. கீழக்கரை தெற்குதெரு பரிபாலன கமிட்டி ஜும்மா பள்ளிவாசல் தலைவர் உமர் அப்துல் காதர் களஞ்சியம் தலைமை தாங்கினார். நிலாமுதீன் ஆலிம் முன்னிலை வகித்தார். வடக்கு தெரு ஜமாஅத் நிர்வாக சபை தலைவர் ரத்தின முஹம்மது தலைமையில் கலீல் ரகுமான் ஆலிம் முன்னிலையிலும், மேலத்தெரு ஜும்மா பள்ளிவாசல் தலைவர் யூசுப் சாஹிப் தலைமையில் மன்சூர் அலி நூரி முன்னிலையிலும் கிழக்குத் தெரு ஜமாஅத் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் சேகு அபூபக்கர் சாஹிப் தலைமையில் சம்சுதீன் ஆலிம் முன்னிலையிலும் நடுத் தெரு ஜும்மா பள்ளிவாசலில் தலைவர் கியாதுதீன் தலைமையில் காதர் பக்ஸ் ஹுஸைன் சித்தீகி முன்னிலையில் பழைய குத்பா பள்ளி ஜமாஅத் தலைவர் அபுதாஹிர் தலைமையில் அபூபக்கர் சித்திக் மவுலவி முன்னிலையிலும் மின்ஹாஜியார் பள்ளிவாசல் தலைவர் சாகுல் ஹமீது தலைமையில் ரசூல் நிஸ்தார் மஸ்லஹி ஆலிம் முன்னிலையிலும் கடற்கரை பள்ளியில் ஆபிஸ் ரஹூப் முன்னிலையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

அதேபோல் ஏர்வாடி தர்கா மஸ்ஜித் நபவியில் ராமநாதபுரம் மாவட்டம் டவுன் காஜி சலாஹூத்தீன் ஆலிம் தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. சிறப்பு தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும் செய்திகள்