< Back
முத்துச்சரம்
கதிர்வீச்சு பொருட்கள்!
முத்துச்சரம்

கதிர்வீச்சு பொருட்கள்!

தினத்தந்தி
|
9 April 2023 3:14 PM IST

நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒருசில பொருட்களில், கதிர்வீச்சு இருக்க வாய்ப்பிருக்கிறது. அவை பற்றி தெரிந்து கொள்வோமா..?

* வாழை

பொட்டாசியம் இருப்பதால் இந்தியர்களின் ஆஸ்தான வாழையிலும் கதிர்வீச்சு உண்டு. பொதுவாக பொட்டாசியம் உள்ள பொருட்களான வாழை, உருளைக்கிழங்கு, கேரட், லிமா பீன்ஸ், சிவப்பு இறைச்சி என அனைத்துமே கதிர்வீச்சு தன்மை(ராடன் 226) அதிகம் கொண்டவைதான்.

* புகையறியும் டிடெக்டர்

தீ விபத்துகளை தவிர்க்க உதவும் டிடெக்டர்களில் 80 சதவிகிதம் அமெரியம்-242 கதிரியக்க தனிமம் உண்டு. பெரிய பாதிப்பு எதுவும் நேர்ந்து விடாது. டிடெக்டர்களை கவனமாக அப்புறப்படுத்தவேண்டும் அவ்வளவுதான்.

* சி.எப்.எல் பல்புகள்!

பல்புகளில் கிரிப்டான்-85 எனும் கதிரியக்க தனிமம் 15 நானோக்யூரிகள் உள்ளது. 10.4 ஆண்டுகள் கதிரியக்க தனிம கதிர்வீச்சுகளை வெளியிடும் என்பதால் இதனை பயன்பாடு முடிந்ததும் பாதிப்பு ஏற்படாமல் அப்புறப்படுத்துவது அவசியம். வாட்சுகள், ஸ்பீடோமீட்டர்களில் உள்ள பளிச்சிடும் தன்மைக்கு ட்ரிட்டியம் எனும் ஹைட்ரஜன் ஐசோடோப் பயன்படுகிறது. கதிர்வீச்சு தனி மம் கொண்ட பெயிண்டுகளுக்கும் இது பயன்படுவது உண்டு.

மேலும் செய்திகள்