< Back
மாநில செய்திகள்
வெளிப்படையாகவே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்- திமுக எம்.பி. செந்தில்குமார்
மாநில செய்திகள்

வெளிப்படையாகவே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்- திமுக எம்.பி. செந்தில்குமார்

தினத்தந்தி
|
6 Dec 2023 1:27 AM IST

குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து பேசி வருகின்றன.

சென்னை,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகளைத் தொடா்ந்து நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தொடர் நடை பெற்று வருகிறது. எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து பேசி வருகின்றன.

இந்த நிலையில் நாடாளுமன்ற மக்களவையில் பேசிய திமுக எம்.பி. செந்தில் குமார் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக வென்ற மாநிலங்களைக் குறிப்பிட்டு பேசியபோது பயன்படுத்திய வார்த்தை சர்ச்சையை கிளப்பியது. எனவே அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜகவினர் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் திமுக எம்.பி. செந்தில்குமார் அவர் பயன்படுத்திய வார்த்தைக்கு மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, "நடந்துமுடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன்.எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை, அது தவறான பொருள் தருவது என்பதால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்