< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
26 July 2023 6:47 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பஸ் ஊருக்குள் வர வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி முதல் முதுகுளத்தூர் செல்லும் 2 ஏ தடம் எண் கொண்ட அரசு பஸ் மாலை நேரங்களில் கடந்த சில நாட்களாக எஸ்.காவனூர் ஊருக்குள் வருவதில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இந்த பஸ் மீண்டும் ஊருக்குள் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழனி, எஸ்.காவனூர்.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

ராமநாதபுரம் நகரில் அரண்மனை பின்பகுதியில் அதிக மக்கள் வசிக்கும் முனியசாமி கோவில் தெருவில் பாதாள சாக்கடை நீர் வெளியேறி குளம்போல் தேங்கி துர்நாற்றமும் சுகாதார கேடும் ஏற்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் பஸ்கள் போதுமானதாக இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜா, ஆர்.எஸ்.மங்கலம்.

கருவேலமரங்கள் ஆக்கிரமிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுவட்டார பகுதியில் ஒரு சில சாலை ஓரங்களில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது கருவேல மர முட்கள் குத்தி காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ராமநாதபுரம்.

சேதமடைந்த சாலை

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதிக்கு உட்பட்ட ஒரு சில கிராமங்களுக்கு செல்லும் சாலை ஆங்காங்கே சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

பொதுமக்கள், சாயல்குடி.

Related Tags :
மேலும் செய்திகள்