< Back
முத்துச்சரம்
எரிமலைக்குள் செல்வோம்
முத்துச்சரம்

எரிமலைக்குள் செல்வோம்

தினத்தந்தி
|
1 Oct 2023 3:37 PM IST

மெக்ஸிகோ நாட்டில் உள்ள ப்யூப்லா நகரில் உள்ள சிறிய எரிமலை அருகில் உள்ள க்யூக்ஸ்கோமேட் என்ற சிறு நகரம் சுற்றுலா நகரமாக வேகமாக வளர்ந்து வருகிறது.

மெக்ஸிகோ நாட்டில் உள்ள ப்யூப்லா நகரில், உலகிலேயே மிகச் சிறிய எரிமலை உள்ளது. இது அமைதியாகி பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. பொதுவாக எரிமலைகளை சாபம் என்பார்கள்.

பேரழிவு ஏற்படுத்துவதால் இப்படிச் சொல்வார்கள். ஆனால் 23 அடி அகலமான இந்த எரிமலை, பிரபலமான சுற்றுலாத் தலம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

இதனுள் ஒரு சுழல் மாடிப் படியை இறக்கி, அதன் வழியே சுற்றுலாப் பயணிகளை நடக்கச் செய்து ஒரு எரிமலையின் உட்பக்க சுவர்கள் எப்படி இருக்கும் என காட்டுகிறார்கள்.

அட..! என ஆச்சரியமாக இதனைப் பார்க்கவும் கூட்டம் கூடுகிறது. பலன்... இதன் அருகில் உள்ள க்யூக்ஸ்கோமேட் என்ற சிறு நகரம் சுற்றுலா நகரமாக வேகமாக வளர்ந்து வருகிறது.

மேலும் செய்திகள்