< Back
முத்துச்சரம்
பேரிடர் காலங்களில் மக்களை பாதுகாக்க தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கை-அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேட்டி
விருதுநகர்
முத்துச்சரம்

பேரிடர் காலங்களில் மக்களை பாதுகாக்க தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கை-அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேட்டி

தினத்தந்தி
|
1 Oct 2023 2:18 AM IST

தமிழகத்தில் புயல் மற்றும் மழையால் பாதிப்பு ஏற்படாத வகையில் இருக்க தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

விருதுநகரில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அறிவுறுத்தல்

தமிழக முதல்-அமைச்சர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனைத்து துறை தலைமை அதிகாரிகளையும் அழைத்து பேரிடர் காலங்களில் பாதிப்புகள் ஏற்படாத வகையில் இருக்க செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் அதன் வரைமுறைகள் குறித்தும் அறிவுறுத்தியுள்ளார். அந்த வகையில் தமிழகத்தில் மழைக்காலங்களில் மக்களை பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து முதல்-அமைச்சர் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். அந்த வகையில் அதிகாரிகளும் பேரிடர் காலங்களில் மிகுந்த கவனத்துடன் செயல்பட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

அவசியம்

சென்னையில் வேளச்சேரி பகுதியில் மழையால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அடுத்து 2 புயல்கள் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தாலும் புயல் வந்தால் தான் மழை பெய்கிறது.

தமிழகத்தை பொறுத்தமட்டில் நீர்நிலைகளில் நீர்மட்டம் குறைவாக உள்ள நிலையில் மழை அவசியம். எனவே புயல் வந்தாலும் அதை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்