நோய்க்கு மருந்துபோடும் நவீன சட்டை..!
|ஆறு மாதம் வரை இந்தப் பாக்கெட்டுகளில் உள்ள மருந்துகளுக்குச் சக்தி உண்டு. உடையைத் துவைத்துச் சுத்தம் செய்ய விரும்பினால் மருந்து பாக்கெட்டுகளை எடுத்துவிட்டுத் துவைக்கலாம்.
நீண்ட நாள் நோயாக இருந்தாலும் சரி, அண்மையில் தோன்றிய மிக மோசமான நோயாக இருந்தாலும் சரி... ஆடைகளின் உட்புறத்தில் ஒவ்வொரு நோய்க்கும் தேவையான மூலிகை மருந்துகளை பொடியாகவோ, களிம்பு போன்றோ தயாரித்து சிறுசிறு பைகளில் இணைத்துத் தைக்கும் முறையைக் கண்டறிந்துள்ளது சீனா.
இந்த மருந்து உடையை அணிந்ததும், உடல் வெப்பத்தால் மருந்துகள் உள்ளிழுக்கப்பட்டு நோயுள்ள பகுதிகளில் செயல் பட்டு குணமாக்குகின்றன என்கிறார்கள் இதனை வடிவமைத்தவர்கள்.
ஒவ்வொரு உடையிலும் அதிகபட்சம் ஒன்று முதல் ஆறு பாக்கெட் மருந்துகள் மட்டுமே இணைக்கப்படுகின்றன. ஆறு மாதம் வரை இந்தப் பாக்கெட்டுகளில் உள்ள மருந்துகளுக்குச் சக்தி உண்டு. உடையைத் துவைத்துச் சுத்தம் செய்ய விரும்பினால் மருந்து பாக்கெட்டுகளை எடுத்துவிட்டுத் துவைக்கலாம். பிறகு வைத்து விடலாம்; அல்லது பழைய மருந்து பாக்கெட்டுகளை எடுத்துவிட்டுப் புதிய பாக்கெட்டுகளையும் இணைத்து அணிந்து கொள்ளலாம்.
பல ஆண்டுகளாகத் தீராத வயிற்று வலி, மார்புச் சளி முதலியவற்றினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் அதிகபட்சம் இரண்டே மாதத்தில் இந்த மருந்து ஆடைகளால் முற்றிலும் குணமாகி உள்ளதை சீனாவின் அன்ஹூய் மருத்துவப் பல்கலைக்கழகம் நிரூபித்துக் காட்டியுள்ளது.