< Back
டென்னிஸ்
டென்னிஸ்
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: தொடக்க ஆட்டத்தில் சபலென்கா வெற்றி
|3 Nov 2024 6:15 AM IST
டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரியாத்தில் நடைபெற்று வருகிறது.
ரியாத்,
உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நேற்று தொடங்கியது.
இதன் ஒற்றையர் 'பர்பிள்' பிரிவில் முதல் ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீராங்கனை சபலென்கா (பெலாரஸ்), சீனாவின் ஜாங் கின்வென்னை சந்தித்தார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சபலெனகா 6-3, 6-4 என்ற நேர்செட்டில் ஜாங் கின்வென்னை வீழ்த்தினார்.