< Back
டென்னிஸ்
டென்னிஸ்
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்; எலினா ரைபகினாவை வீழ்த்திய கின்வென் ஜெங்
|4 Nov 2024 8:50 PM IST
டபிள்யூ.டி.ஏ.இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்து வருகிறது.
ரியாத்,
உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ.இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தானின் எலினா ரைபகினா, சீனாவின் கின்வென் ஜெங் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட எலினா ரைபகினா 6-7 (4-7), 6-3, 1-6 என்ற செட் கணக்கில் கின்வென் ஜெங்கிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார்.