< Back
டென்னிஸ்
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: முதல் ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் வெற்றி

இகா ஸ்வியாடெக் (image courtesy: WTA twitter via ANI)

டென்னிஸ்

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: முதல் ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் வெற்றி

தினத்தந்தி
|
4 Nov 2024 4:33 AM IST

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்து வருகிறது.

ரியாத்,

உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ.இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்து வருகிறது.

இதில் 2-வது நாளான நேற்று ஒற்றையர் 'ஆரஞ்சு' பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான இகா ஸ்வியாடெக் (போலந்து), 13-ம் நிலை வீராங்கனையான பார்பரா கிரெஜ்சிகோவாவுடன் (செக்குடியரசு) மோதினார்.

இந்த ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் சரிவில் இருந்து மீண்டு வந்து 4-6, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் கிரெஜ்சிகோவாவை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கினார்.

மேலும் செய்திகள்