< Back
டென்னிஸ்
டென்னிஸ்
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: கோகோ காப் - கின்வென் பலப்பரீட்சை
|9 Nov 2024 4:06 AM IST
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது.
ரியாத்,
தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்ற டபிள்யூ.டி.ஏ. இறுதிசுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடைபெற்று வருகிறது.
இதன் இறுதிப்போட்டிக்கு ஜாங் கின்வென் (சீனா) - கோகோ காப் (அமெரிக்கா) ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது.
கோகோ காப் அரையிறுதியில் சபலென்காவையும், கின்வென் அரையிறுதியில் கிரெஜ்சிகோவாவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர்.