< Back
டென்னிஸ்
டென்னிஸ்
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: கோகோ காப் சாம்பியன்
|10 Nov 2024 1:24 AM IST
இறுதிப்போட்டியில் கோகோ காப் - கின்வென் உடன் பலப்பரீட்சை நடத்தினார்.
ரியாத்,
தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்ற டபிள்யூ.டி.ஏ. இறுதிசுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடைபெற்றது.
இதன் இறுதிப்போட்டிக்கு கின்வென் (சீனா) - கோகோ காப் (அமெரிக்கா) ஆகியோர் தகுதி பெற்றனர். இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை கின்வென் கைப்பற்றினார். இதனையடுத்து 2-வது செட்டை கோகோ காப் கைப்பற்றினார்.
இதனால் 3-வது செட் பரபரப்புக்குள்ளானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த செட்டை டை பிரேக்கர் வரை போராடி கோகோ காப் கைப்பற்றினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் கோகோ காப் 3-6, 6-4 மற்றும் 7-6 என்ற செட் கணக்கில் கைப்பற்றி வெற்றி பெற்றார்.