< Back
டென்னிஸ்
டென்னிஸ்
வியன்னா ஓபன் டென்னிஸ்; காலிறுதியில் அதிர்ச்சி தோல்வி கண்ட ஸ்வெரேவ்
|26 Oct 2024 9:44 AM IST
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரியா,
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், இத்தாலியின் லோரென்சோ முசெட்டி உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-2 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றிய ஸ்வெரேவ், ஆட்டத்தின் அடுத்த இரு செட்களை 6-7 (5-7), 4-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தார். இறுதியில் இந்த ஆட்டத்தில் லோரென்சோ முசெட்டி 2-6, 7-6 (7-5), 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் அதிர்ச்சி தோல்வி கண்ட அலெக்சாண்டர் ஸ்வெரேவ் தொடரில் இருந்து வெளியேறினார்.