< Back
டென்னிஸ்
டென்னிஸ்
வியன்னா ஓபன் டென்னிஸ்; காலிறுதியில் தோல்வி கண்ட போபண்ணா இணை
|25 Oct 2024 9:19 AM IST
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரியா,
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணை, பிரிட்டனின் நீல் ஸ்குப்ஸ்கி - நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் இணையுடன் மோதியது.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 7-6 (9-7) என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றிய போபண்ணா இணை, ஆட்டத்தின் அடுத்த இரு செட்களை 4-6, 8-10 என்ற புள்ளிக்கணக்கில் இழந்து தோல்வியை தழுவியது. இந்த தோல்வியின் மூலம் போபண்ணா இணை தொடரில் இருந்து வெளியேறியது.