< Back
டென்னிஸ்
டென்னிஸ்
வியன்னா ஓபன் டென்னிஸ்; அலெக்ஸ் டி மினார் காலிறுதிக்கு முன்னேற்றம்
|25 Oct 2024 1:48 PM IST
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரியா,
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், இத்தாலியின் பிளேவியோ கோபோலி உடன் மோதினார்.
இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டி மினார் முதல் செட்டை 7-6 (7-2) என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற 2வது செட்டில் 3-1 என்ற புள்ளிக்கணக்கில் டி மினார் முன்னிலையில் இருந்தார். அப்போது பிளேவியோ கோபோலி காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார்.
இதன் காரணமாக அலெக்ஸ் டி மினார் காலிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் அலெக்ஸ் டி மினார், செக் குடியரசின் ஜக்குப் மென்ஷிக் உடன் மோத உள்ளார்.