< Back
டென்னிஸ்
டென்னிஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றுக்கு முன்னேறினார் ஜானிக் சினெர்
|2 Sept 2024 5:02 AM IST
அடுத்த ஆட்டத்தில் ஜானிக் சினெர், அமெரிக்க வீரர் டாமி பாலை சந்திக்கிறார்.
நியூயார்க்,
ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 'நம்பர் ஒன்' வீரர் ஜானிக் சினெர் (இத்தாலி) ஆஸ்திரேலியாவின் கிறிஸ்டோபர் ஓ கனோலுடன் மோதினார். இந்த போட்டியில், சினெர், 6-1, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் கிறிஸ்டோபர் ஓ கனோலை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
முன்னணி வீரர்கள் ஜோகோவிச், அல்காரஸ் வெளியேறிய நிலையில் ஆண்கள் பிரிவில் சினெர் பட்டம் வெல்வதற்கு வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. அடுத்து அவர் அமெரிக்க வீரர் டாமி பாலை சந்திக்கிறார்.