அமெரிக்க ஓபன் டென்னிஸ்; 4வது சுற்றுக்கு முன்னேறிய அரினா சபலென்கா
|அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
நியூயார்க்,
ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் மூன்றாம் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, ரஷியாவின் எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவா உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 2-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த சபலென்கா, ஆட்டத்தின் அடுத்தடுத்த செட்களை 6-1, 6-2 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இறுதியில் அரினா சபலென்கா 2-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவை வீழ்த்தி 4வது சுற்றுக்கு (ரவுண்ட் ஆப் 16) முன்னேறினார்.
நாளை நடைபெறும் 4வது சுற்று ஆட்டத்தில் அரினா சபலென்கா, பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் உடன் மோத உள்ளார்.