< Back
டென்னிஸ்
டென்னிஸ் தரவரிசை பட்டியல்; சரிவை சந்தித்த ஜோகோவிச்

Image Courtesy: AFP

டென்னிஸ்

டென்னிஸ் தரவரிசை பட்டியல்; சரிவை சந்தித்த ஜோகோவிச்

தினத்தந்தி
|
10 Sept 2024 12:03 PM IST

அமெரிக்க ஓபன் டென்னிஸ் முடிந்ததும் நேற்று புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

நியூயார்க்,

இரு வாரங்களாக நடைபெற்று வந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த 8ம் தேதி நிறைவடைந்தது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜன்னிக் சின்னெரும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரினா சபலென்காவும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.

இந்நிலையில், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நிறைவடைந்ததும் புதிய டென்னிஸ் தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் சின்னெர் முதலிடத்தை தக்க வைத்துள்ளார். 2-வது இடத்தில் இருந்த ஜோகோவிச் (செர்பியா) அமெரிக்க ஓபனில் 3-வது சுற்றுடன் வெளியேறியதால் 4-வது இடத்துக்கு சரிந்துள்ளார்.

ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் இரு இடம் முன்னேறி 2-வது இடத்திற்கு வந்துள்ளார். கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 3-வது இடத்தில் நீடிக்கிறார். அமெரிக்க ஓபனில் இறுதி ஆட்டத்தில் தோல்வி கண்ட டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா) 7-வது இடத்துக்கு வந்துள்ளார்.

பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் முதல் இரு இடங்களில் போலந்தின் இகா ஸ்வியாடெக், பெலாரசின் அரினா சபலென்கா தொடர்கிறார்கள். அமெரிக்காவின் கோகோ காப் 6-வது இடத்துக்கு சரிந்துள்ளார். அமெரிக்க ஓபனில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 3 இடம் உயர்ந்து 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

மேலும் செய்திகள்