< Back
டென்னிஸ்
டென்னிஸ்
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி
|31 Oct 2024 10:59 AM IST
முன்னணி வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்சி போபிரின்னை எதிர்கொண்டார்.
பாரீஸ்,
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று (ரவுண்ட் ஆப் 32) ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்சி போபிரின்னை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் இதில் அலேக்சி போபிரின் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 6-4, 2-6 , 7 (7), 6 (4 ) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார் . இதனால் மெத்வதேவ் தொடரில் இருந்து வெளியேறினார்