< Back
டென்னிஸ்
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: காலிறுதியில் டிமிட்ரோவ் அதிர்ச்சி தோல்வி

image courtesy: AFP

டென்னிஸ்

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: காலிறுதியில் டிமிட்ரோவ் அதிர்ச்சி தோல்வி

தினத்தந்தி
|
2 Nov 2024 12:52 PM IST

டிமிட்ரோவ் காலிறுதியில் கரன் கச்சனோவ் உடன் மோதினார்.

பாரீஸ்,

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடர் பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான டிமிட்ரோவ் (பல்கேரியா) கரன் கச்சனோவ் (ரஷியா) உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கச்சனோவ் 6-2 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் டிமிட்ரோவுக்கு அதிர்ச்சி அளித்து அரையிறுதிக்கு முன்னேறினார். தோல்வி கண்ட டிமிட்ரோவ் தொடரிலிருந்து வெளியேறினார்.

கச்சனேவ் அரையிறுதியில் ஹூம்பெர்ட் உடன் மோத உள்ளார்.

மேலும் செய்திகள்