< Back
டென்னிஸ்
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: போபண்ணா இணை காலிறுதியில் தோல்வி

மேத்யூ எப்டன், ரோகன் போபண்ணா (image courtesy: ATP Tour twitter via ANI)

டென்னிஸ்

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: போபண்ணா இணை காலிறுதியில் தோல்வி

தினத்தந்தி
|
2 Nov 2024 5:27 AM IST

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் போபண்ணா இணை தோல்வியடைந்தது.

பாரீஸ்,

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடர் பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணை, நெதர்லாந்தின் வெஸ்லி கூல்ஹாப் - குரோஷியாவின் நிகோலா மெக்டிக் இணையுடன் மோதியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் போபண்ணா - எப்டன் இணை 6-7 (13-15), 5-7 என்ற செட் கணக்கில் வெஸ்லி - நிகோலா இணையிடம் தோல்வியடைந்து அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

மேலும் செய்திகள்