< Back
டென்னிஸ்
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; அலெக்சாண்டர் ஸ்வெரேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

Image Courtesy : AFP / ALEXANDER ZVEREV

டென்னிஸ்

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; அலெக்சாண்டர் ஸ்வெரேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
2 Nov 2024 9:02 PM IST

பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடர் பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது.

பாரீஸ்,

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடர் பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரர்களான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) - ஹோல்கர் ரூனே (டென்மார்க்) ஆகியோர் மோதினர்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்வெரேவ் 6-3, 7-6 (7-4) என்ற புள்ளிக்கணக்கில் ஹோல்கர் ரூனேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்வெரேவ், கரேன் கச்சனோவ் (ரஷியா) அல்லது உகோ ஹம்பர்ட் (பிரான்ஸ்) ஆகியோரில் ஒருவருடன் மோதுவார்.

மேலும் செய்திகள்