< Back
டென்னிஸ்
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: 3-வது சுற்றில் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி

image courtesy: AFP

டென்னிஸ்

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: 3-வது சுற்றில் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி

தினத்தந்தி
|
2 Nov 2024 6:36 AM IST

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் 3-வது சுற்றில் அல்காரஸ் தோல்வியடைந்தார்.

பாரீஸ்,

பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), 18-ம் நிலை வீரரான ஹூம்பெர்ட்டுடன் (பிரான்ஸ்) மோதினார்.

இந்த போட்டியில் அல்காரஸ் 1-6, 6-3, 5-7 என்ற செட் கணக்கில் ஹூம்பெர்ட்டிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இந்த ஆட்டம் 2 மணி 16 நிமிடம் நீடித்தது. மற்ற ஆட்டங்களில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), கரன் கச்சனோவ் (ரஷியா), டிமிட்ரோவ் (பல்கேரியா), அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா), சிட்சிபாஸ் (கிரீஸ்), ஹோல்கர் ரூனே (டென்மார்க்), ஜோர்டான் தாம்சன் (ஆஸ்திரேலியா) ஆகியோர் வெற்றி பெற்று காலிறுதியை எட்டினர்.

மேலும் செய்திகள்