< Back
டென்னிஸ்
நிங்போ ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் கசட்கினா

image courtesy: wta twitter

டென்னிஸ்

நிங்போ ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் கசட்கினா

தினத்தந்தி
|
21 Oct 2024 3:09 AM IST

நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாரியா கசட்கினா, சக நாட்டு வீராங்கனையான மிர்ரா ஆண்ட்ரீவா உடன் மோதினார்.

பீஜிங்,

நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ரஷிய வீராங்கனை டாரியா கசட்கினா, சக நாட்டு வீராங்கனையான மிர்ரா ஆண்ட்ரீவா உடன் மோதினார்.

இதில் கசட்கினா முதல் செட்டை 6-0 என கைப்பற்றினார். 2-வது செட்டை ஆண்ட்ரீவா 6-4 என கைப்பற்றினார். இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 6-4 என கசட்கினா கைப்பற்றினார். இதையடுத்து 6-0, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் ஆண்ட்ரீவாவை வீழ்த்தி கசட்கினா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

மேலும் செய்திகள்