< Back
டென்னிஸ்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி தோல்வி

Image : AFP 

டென்னிஸ்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி தோல்வி

தினத்தந்தி
|
7 Jun 2024 2:49 AM IST

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது

பாரீஸ்,

முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி- இத்தாலியின் சிமோன் போலெலி- ஆன்ரியா வவாசோரி ஜோடியுடன் மோதியது.

இதில் போபண்ணா ஜோடி 5-7, 6-2, 2-6 என்ற செட் கணக்கில் சிமோன் போலெலி- ஆன்ரியா வவாசோரி இணையிடம் போராடி தோல்வி அடைந்தது. இந்த சீசனில் ஆஸ்திரேலிய ஓபனை வென்றிருந்த போபண்ணா ஜோடி பிரெஞ்சு ஓபனில் நெருங்கி வந்து கோட்டை விட்டுள்ளது

மேலும் செய்திகள்