< Back
டென்னிஸ்
ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: டெய்லர் பிரிட்ஸ் 2-வது வெற்றி

image courtesy: ATP Tour twitter

டென்னிஸ்

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: டெய்லர் பிரிட்ஸ் 2-வது வெற்றி

தினத்தந்தி
|
15 Nov 2024 6:46 AM IST

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது.

துரின்,

உலகின் டாப்-8 வீரர்கள் மட்டும் பங்கேற்றுள்ள ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இதன் ஒற்றையர் 'லி நாஸ்டாசே' பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா), அலெக்ஸ் டி மினாருடன் (ஆஸ்திரேலியா) மோதினார். இந்த ஆட்டத்தில் டெய்லர் பிரிட்ஸ் 5-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் அலெக்ஸ் டி மினாரை வீழ்த்தினார். 2-வது வெற்றியின் மூலம் பிரிட்ஸ் அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்கிறார்.

இந்த பிரிவில் ஏற்கனவே அரைஇறுதியை எட்டிவிட்ட நம்பர் ஒன் வீரர் இத்தாலியின் ஜானிக் சினெர், கடைசி லீக்கில் ரஷியாவின் மெட்விடேவை தோற்கடித்தால், பிரிட்சுக்கு அரைஇறுதி வாய்ப்பு கிடைக்கும்.

முன்னதாக 'ஜான் நியூ கம்ப் ' பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் முன்னாள் சாம்பியனான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 7-6 (7-3), 6-3 என்ற நேர் செட்டில் கேஸ்பர் ரூட்டை (நார்வே) வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றார். இந்த ஆட்டம் ஒரு மணி 26 நிமிடம் நடந்தது.

மேலும் செய்திகள்