< Back
டென்னிஸ்
ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்; ஸ்வெரேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய டெய்லர் பிரிட்ஸ்

Image Courtesy: AFP / Taylor Fritz

டென்னிஸ்

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்; ஸ்வெரேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய டெய்லர் பிரிட்ஸ்

தினத்தந்தி
|
17 Nov 2024 6:27 AM IST

டெய்லர் பிரிட்ஸ் 6-3, 3-6, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் ஸ்வெரேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்,

துரின்,

உலகின் டாப்-8 முன்னணி வீரர்கள் (ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு) மட்டும் பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் - அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் உடன் மோதினார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய டெய்லர் பிரிட்ஸ் 6-3, 3-6, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் ஸ்வெரேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். பிரிட்ஸ் இறுதிப்போட்டியில் ஜன்னிக் சின்னெர் (இத்தாலி) - கேஸ்பர் ரூட் (நார்வே) ஆகியோரில் ஒருவரை சந்திக்க வேண்டும்.

மேலும் செய்திகள்