< Back
டென்னிஸ்
டென்னிஸ்
ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்; கேஸ்பர் ரூட் அரையிறுதிக்கு முன்னேற்றம்
|16 Nov 2024 6:35 AM IST
ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது.
துரின்,
உலகின் டாப்-8 வீரர்கள் மட்டும் பங்கேற்றுள்ள ஆண்கள் (ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு) டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் நார்வேயின் கேஸ்பர் ரூட், ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-4 என்ற புள்ளிக்கணக்கில் கேஸ்பர் ரூட்டும், 2வது செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் ரூப்லெவும் கைப்பற்றினர். தொடர்ந்து பரபரப்பாக நடைபெற்ற 3வது செட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஸ்பர் ரூட் 6-2 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார்.
இறுதியில் இந்த ஆட்டத்தில் 6-4, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் ஆண்ட்ரே ரூப்லெவை வீழ்த்தி கேஸ்பர் ரூட் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் அரையிறுதிக்கு முன்னேறினார்.