< Back
டென்னிஸ்
ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்; கார்லஸ் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி

Image Courtesy: AFP / Casper Ruud

டென்னிஸ்

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்; கார்லஸ் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி

தினத்தந்தி
|
11 Nov 2024 8:52 PM IST

ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற்று வருகிறது.

துரின்,

உலகின் டாப்-8 முன்னணி வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள துரின் நகரில் நேற்று தொடங்கியிஅது. இதன் ஒற்றையர் பிரிவில் கலந்து கொள்ளும் 8 வீரர்கள் 'லீ நாஸ்டாசே', 'ஜான் நியூகாம்பே' என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

'லீ நாஸ்டாசே' பிரிவில் 'நம்பர் ஒன்' வீரர் ஜானிக் சினெர் (இத்தாலி), முன்னாள் சாம்பியன் டேனில் மெத்வதேவ் (ரஷியா), 6-ம் நிலை வீரர் டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா), முதல் முறையாக கால்பதிக்கும் அலெக்ஸ் டி மினாரும் (ஆஸ்திரேலியா), 'ஜான் நியூகாம்பே' பிரிவில் 2 முறை சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), 7-ம் நிலை வீரர் கேஸ்பர் ரூட் (நார்வே), 9-ம் நிலை வீரர் ஆந்த்ரே ரூப்லெவும் (ரஷியா) இடம் பிடித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் ஆட்டம் ஒன்றில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் - நார்வேயின் கேஸ்பர் ரூட் உடன் மோதினார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கேஸ்பர் ரூட் 6-1, 7-5 என்ற செட் கணக்கில் கார்லஸ் அல்காரஸூக்கு அதிர்ச்சி அளித்தார்.

மேலும் செய்திகள்