ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்; ஆறுதல் வெற்றி பெற்ற போபண்ணா இணை
|ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற்று வருகிறது.
துரின்,
உலகின் டாப்-8 முன்னணி வீரர்கள் (ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு) மட்டும் பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணை, ஜெர்மனியின் கெவின் கிராவிட்ஸ் - டிம் பூட்ஸ் இணையை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்ட போபண்ணா இணை 7-5, 6-7 (6-8), 10-7 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் கெவின் கிராவிட்ஸ் - டிம் பூட்ஸ் இணையை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த தொடரில் முதல் இரு ஆட்டங்களில் தோல்வி கண்ட போபண்ண இணை நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று ஆறுதல் அடைந்தது. இரண்டு தோல்வி காரணமாக போபண்ணா இணை அரையிறுதிக்கு முன்னேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.