< Back
டென்னிஸ்
ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்; இரட்டையர் பிரிவில் போபண்ணா இணை தோல்வி

image courtesy:AFP

டென்னிஸ்

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்; இரட்டையர் பிரிவில் போபண்ணா இணை தோல்வி

தினத்தந்தி
|
12 Nov 2024 4:03 PM IST

ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற்று வருகிறது.

துரின்,

உலகின் டாப்-8 முன்னணி வீரர்கள் (ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு) மட்டும் பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணை, இத்தாலியின் ஆண்ட்ரியா வவசோரி - சிமோன் பொலேல்லி இணையுடன் மோதியது.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்ட ஆண்ட்ரியா வவசோரி - சிமோன் பொலேல்லி இணை 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணையை வீழ்த்தியது.

மேலும் செய்திகள்