< Back
டென்னிஸ்
டென்னிஸ்
ஜப்பான் ஓபன் டென்னிஸ்; சீன வீராங்கனை சாம்பியன்
|28 Oct 2024 10:30 AM IST
இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை குயின்வென் ஜெங், அமெரிக்காவின் சோபியா கெனின் உடன் மோதினார்.
டோக்கியோ,
ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பானில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சீன வீராங்கனை குயின்வென் ஜெங், அமெரிக்காவின் சோபியா கெனின் உடன் மோதினார்.
இந்த போட்டியில் ஆர்மபம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்வென் ஜெங் 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் சோபியா கெனினை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.