< Back
டென்னிஸ்
டென்னிஸ்
ஊக்க மருந்து சர்ச்சை: போட்டிகளில் பங்கேற்க ரஷிய டென்னிஸ் வீரருக்கு 2 ஆண்டுகள் தடை
|24 Dec 2024 4:03 PM IST
இவரது தடைக்காலம் 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோவ்,
ரஷிய டென்னிஸ் வீரரான டேனியல் சவேலேவ் (வயது 23) ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக 2 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜீலை மாதம் இவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தான மெல்டோனியம் உட்கொண்டிருந்தது தெரிய வந்தது. சவேலேவும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து இவரை 2 ஆண்டுகள் டென்னிஸ் போட்டிகளில் இருந்து தடை செய்வதாக சர்வதேச டென்னிஸ் ஒருமைப்பாடு அமைப்பு (ஐடிஐஏ) அறிவித்துள்ளது. இவரது தடைக்காலம் 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைய உள்ளது.