டேவிஸ் கோப்பை டென்னிஸ்; நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி
|ஆண்கள் அணிகளுக்கான டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
ரோம்,
ஆண்கள் அணிகளுக்கான டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன் இத்தாலி - நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியின் முதல் ஆட்டத்தில் , இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி 6-4, 6-2 என்ற செட்களில் நெதர்லாந்தின் வான் டெ ஜாண்ட்ஷுல்பினை வீழ்த்தினார். இவர் காலிறுதியில் ரபேல் நடாலை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்றுமொரு ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 வீரரான ஜன்னிக் சின்னெர் நெதர்லாந்தின் டாலோன் கிரீஸ்பூக்கரை 7-6(2), 6-2 என்ற செட்களில் தோற்கடித்தார். இதன் மூலம் இத்தாலி அணி 2-0 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
கடந்த 104 ஆண்டுகளாக முயன்று வரும் நெதர்லாந்து இந்தக் கட்டத்துக்கு வந்தது இதுவே முதல் முறையாகும். கடந்த 11 ஆண்டுகளில் இத்தாலி அடுத்தடுத்து டேவிஸ் கோப்பையை வென்ற முதல் அணியாக உருவெடுத்துள்ளது. இதுவரை மொத்தம் 3 முறை (1976, 2023, 2024) இத்தாலி அணி கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் மகளிர் அணிகளுக்கான பில்லி ஜீன் கிங் கோப்பை போட்டியில் இத்தாலி சாம்பியனாகியிருந்ததும் நினைவு கூரத்தக்கது.