< Back
டென்னிஸ்
டென்னிஸ்
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஜெசிகா பெகுலா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
|19 Aug 2024 2:35 AM IST
பெகுலா இறுதிப்போட்டியில் சபலென்கா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
சின்சினாட்டி,
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), பாலா படோசா (ஸ்பெயின்) உடன் பலப்பரீட்சை நடத்தினார்.
இதில் முதல் செட்டை பெகுலா கைப்பற்றிய நிலையில், 2-வது செட்டை படோசா கைப்பற்றினார். இதற்கடுத்து நடைபெற்ற 3-வது செட்டை எளிதில் கைப்பற்றி பெகுலா வெற்றி பெற்றார். இந்த ஆட்டத்தில் பெகுலா 6-1, 3-6 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
இவர் இறுதிப்போட்டியில் அரினா சபலென்கா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.