< Back
டென்னிஸ்
டென்னிஸ்
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் அரையிறுதிக்கு தகுதி
|18 Aug 2024 12:18 AM IST
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிக்கு இகா ஸ்வியாடெக் தகுதி பெற்றுள்ளார்.
சின்சினாட்டி,
பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்றிரவு நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றின் இகா ஸ்வியாடெக் (போலந்து), மிர்ரா ஆண்ட்ரீவா (ரஷியா) உடன் பலப்பரீட்சை நடத்தினார்.
இதில் முதல் செட்டை ஆண்ட்ரீவா கைப்பற்றி ஸ்வியாடெக்குக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதன்பின் சுதாரித்துக்கொண்டு வெகுண்டெழுந்த ஸ்வியாடெக், அதிரடியாக விளையாடி அடுத்த 2 செட்டுகளையும் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டத்தில் ஸ்வியாடெக் 4-6, 6-3 மற்றும் 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.